முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் மோதி டிரைவர் சாவு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் மோதியதில், காரை ஓட்டிச் சென்ற டிரைவர் உயிரிழந்தார். காரில் பயணித்த

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:45 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் மோதியதில், காரை ஓட்டிச் சென்ற டிரைவர் உயிரிழந்தார். காரில் பயணித்த இருவர் காயம் அடைந்தனர்.
ராஜபாளையம், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அ.தனசேகரன் நாடார் (65). இவரது மனைவி தாமனி. இருவரும் தங்களது காரில், டிரைவர் ஒருவரை போட்டு மதுரைக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.

 ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, டிரைவர் ராஜபாளையம், ஸ்ரீரெங்கபாளையம், செல்லையா மகன் சித்திரை (44) செல்போன் பேசிக் கொண்டே காரை ஓட்டி, சாலை ஓரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியுள்ளார். இதில் சித்திரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த தனசேகரன் மற்றும் தாமனி ஆகியோர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தனசேகரன், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →