தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வர் நாளை தூத்துக்குடி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அந்தோனி கிரேஸை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) தூத்துக்குடி வருகிறார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அந்தோனி கிரேஸை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) தூத்துக்குடி வருகிறார். இதையொட்டி, 3000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், அதிமுக சார்பில் அந்தோனி கிரேஸைம், பாஜக சார்பில் ஜெயலட்சுமியும் மற்றும் 5 சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 7 பேர் களத்தில் உள்ளனர்.இந்நிலையில், அதிமுக வேட்பாளர் அந்தோனி கிரேúஸ ஆதரித்து பிரசாரம் செய்தவதற்காக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) பகல் 2 மணியளவில் தூத்துக்குடி வருகிறார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி வருகிறார்.
தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கும் அவர் அங்கிருந்து வேனில் டூவிபுரம் 5-வது தெரு வழியாகச் சென்று அண்ணாநகர் 7-வது தெரு சந்திப்பில் வேனில் அமர்ந்தபடி பேசுகிறார்.பின்னர், அங்கிருந்து விவிடி சிக்னல் வழியாக டபுள்யூஜிசி சாலைக்குச் சென்று குரூஸ் பர்னாந்து சிலை அருகே பேசுகிறார். இதையடுத்து, 1-ம் ரயில்வே கேட், வாடித்தெரு வழியாக திரேஸ்புரம் செல்லும் அவர் அங்கு கூடியிருக்கும் மக்கள் மத்தியில் வேனில் அமர்ந்தபடி பேசுகிறார்.
தொடர்ந்து, எட்டயபுரம் சாலை வழியாக மீனாட்சிபுரம் செல்லும் முதல்வர் ஜெயலலிதா எஸ்ஏவி பள்ளி மைதானத்துக்குச் சென்று ஹெலிகாப்டரில் மாலை 4 மணியளவில் புறப்பட்டுச் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.முதல்வர் வருகையொட்டி மாநகர் முழுவதும் அதிமுக சார்பில் வரவேற்பு தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் இருபுறங்களிலும் கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. முதல்வர் பேசும் இடங்களில் மகளிரணி சார்பில் முளைப்பாரி எடுத்து வரவேற்பு அளிக்க ஏர்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, மாநகரம் முழுவதும் தென்மண்டல ஐஜி அபய்குமார் சிங் உத்தரவின்பேரில் திருநெல்வேலி சரக டிஐஜி சுமித்சரண் மேற்பார்வையில் 8 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 14 பட்டாலியன் பிரிவுகளைச் சேர்ந்த 2600 போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையினர் என மொத்தம் 3000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.