விபத்தில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.6.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூர், திருமுக்குளம், வடகரையில் குடியிருந்து வந்தவர் செல்வராஜ் மனைவி மோட்சமேரி (38). இவர் 6.10.2004-ம் தேதி குலாளர் தெருவில் லோடு வேனில் விறகை இறக்கிவிட்டு, அதில் திரும்பிக்
தற்போதைய செய்திகள்விபத்தில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.6.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூர், திருமுக்குளம், வடகரையில் குடியிருந்து வந்தவர் செல்வராஜ் மனைவி மோட்சமேரி (38). இவர் 6.10.2004-ம் தேதி குலாளர் தெருவில் லோடு வேனில் விறகை இறக்கிவிட்டு, அதில் திரும்பிக்
விபத்தில் உயிரிழந்த பெண்ணின் வாரிசுதாரருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.6.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், திருமுக்குளம், வடகரையில் குடியிருந்து வந்தவர் செல்வராஜ் மனைவி மோட்சமேரி (38). இவர் 6.10.2004-ம் தேதி குலாளர் தெருவில் லோடு வேனில் விறகை இறக்கிவிட்டு, அதில் திரும்பிக் கொண்டிருந்தார். வேன் ரைட்டன்பட்டி தெருவில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு திருப்பத்தில் திரும்பும் போது, சாக்கடையில் இறங்கி கவிழ்ந்தது. இதில் வேனை ஓட்டி வந்த மதிசந்திரன், மோட்சமேரி ஆகியோர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து மோட்சமேரியின் வாரிசுதாரர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், மோட்சமேரியின் வாரிசுதாரருக்கு ரூ.6.65 லட்சத்தை இழப்பீடாக ராஜபாளையம் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க உத்தரவிட்டார்.