முகப்பு
தற்போதைய செய்திகள்

கழிவுநீர் கலந்த குடிநீர்: சிதம்பரத்தில் மக்கள் சாலைமறியல்

சிதம்பரம் 3-வது வார்டில் நந்தவனம், மீனவர்காலணி உள்ளிட்ட தெருக்களில் குடிநீர், புதை சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து கடந்த மாதம் அப்பகுதி மக்கள் சிதம்பரம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:46 AM
பகிர்:

கழிவுநீர் கலந்த குடிநீர் வழங்கப்படுவதை கண்டித்து சிதம்பரத்தில் 3-வது வார்டு மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் 3-வது வார்டில் நந்தவனம், மீனவர்காலணி உள்ளிட்ட தெருக்களில் குடிநீர், புதை சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து கடந்த மாதம் அப்பகுதி மக்கள் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மனு அளித்து வலியுறுத்தினர். தொடரந்து அப்பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் வியோகம் செய்யப்படுதால், ஆத்திரமடைந்த அந்த வார்டு மக்கள், பாட்டாளி மக்கள் கட்சி நகர இளைஞரணி நிர்வாகி ஐயப்பன் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் வடக்குமெயின்ரோட்டில் கடலூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸார் மற்றும் போக்குவரத்து போலீஸார் சென்று அம்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.