முகப்பு
தற்போதைய செய்திகள்

விபத்தில் உயிரிழந்த பால் வியாபாரி குடும்பத்திற்கு ரூ.6.11 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாத்தூர்-மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி (35). இவர் பால் கறந்து, அதை கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்கும் வேலை செய்து வந்தார். 6.11.2007-

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:47 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த பால் வியாபாரியின் குடும்பத்திற்கு ரூ.6.11 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாத்தூர்-மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி (35). இவர் பால் கறந்து, அதை கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்கும் வேலை செய்து வந்தார். 6.11.2007-ம் தேதி சைக்கிளில் மாத்தூர்-மகாராஜபுரம் சாலையில் நரி ஓடை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் தீப்பெட்டி ஆலை வேன் மோதியதில் மாசிலாமணி உயிரிழந்தார்.

இதனையடுத்து இவரது மனைவி சுந்தரம்மாள் (34), மகன்கள் மணிகண்டன் (12), மணி (10), மகள் செல்வி (7), தாய் அந்தோணியம்மாள் ஆகியோர் சார்பில் இழப்பீடு கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.வி. சந்தோஷம், சிவகாசி ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மாசிலாமணியின் வாரிசுதாரருக்கு ரூ.6.11 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.    

முழு கட்டுரையைப் படிக்க →