தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே அதிக வட்டி கேட்டு இளைஞருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு

விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் என்பவரின் மகன் அசோக்(34). இவர் இப்பகுதியில் சலவை நிலையம் நடத்தி வருகிறார். இவர், சிவகாசியைச் சேர்ந்த

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அதிக வட்டி கேட்டு சலவைத் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் என்பவரின் மகன் அசோக்(34). இவர் இப்பகுதியில் சலவை நிலையம் நடத்தி வருகிறார். இவர், சிவகாசியைச் சேர்ந்த ராஜசேகர், சுடர்செல்வம், ரெங்கசாமி ஆகியோரிடம் கடன் பெற்றிருந்தாராம். இந்நிலையில் குறிப்பிட்ட முதலுடன் வட்டி பணம் செலுத்தியுள்ளேன். இந்நிலையில் கூடுதலாக 10 சதவீதம் வட்டி கொடுக்க வேண்டும் என 3 பேரும் கேட்டதற்கு அசோக் எதிர்ப்பு தெரிவித்தாராம். அதற்கு உன்னை கடத்திச் சென்று அடித்து உதைத்து கடையை எழுதி வாங்கிக் கொள்வதாகவும், கொலை மிரட்டலும் விடுத்தார்களாம்.

இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் அசோக் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் ராஜசேகர்(46), சுடர்செல்வம்(45), ரெங்கசாமி(42) ஆகியோர் மீது  வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT