முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேவர் சிலை வைக்க முயற்சி: பதற்றம்: 10 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமத்தில் ஒரு தரப்பினர் பொது வழிப் பாதையை மறித்து தன்னிச்சையாக அலங்கார வளைவு அமைத்து அதில் தேவர் சிலை வைப்பதற்கு முயற்சி

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேவர் சிலை வைக்க முயற்சி: பதற்றம்: 10 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமத்தில் ஒரு தரப்பினர் பொது வழிப் பாதையை மறித்து தன்னிச்சையாக அலங்கார வளைவு அமைத்து அதில் தேவர் சிலை வைப்பதற்கு முயற்சி

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:47 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமத்தில் ஒரு தரப்பினர் பொது வழிப் பாதையை மறித்து தன்னிச்சையாக அலங்கார வளைவு அமைத்து அதில் தேவர் சிலை வைப்பதற்கு முயற்சி மேற்கொள்வதையடுத்து, இரு சமூகத்தினர் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுளதையடுத்து 10 பேர் மீது போலீஸார் வியாழக்கிழமை குற்ற தடுப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து கிருஷ்ணன்கோவில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனு விவரம்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரியநாயகிபுரம் மற்றும் பாட்டக்குளம் கிராமம் உள்ளது. அரியநாயகிபுரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 250 வீடுகளும், 1250 பொதுமக்களும் உள்ளார்கள். பாட்டக்குளத்தில் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த 500 வீடுகளும் சுமார் 2 ஆயிரம் பொதுமக்களும் உள்ளார்கள்.

பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பாட்டக்குளம் கிராம நுழைவு வாயிலில் பொது வழிப் பாதையை மறித்து, தன்னிச்சையாக அலங்கார வளைவு அமைத்துள்ளனர். அதில் பசும்பொன் தேவர் சிலை வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இதனால் இரு இனத்தார்களிடையே இனக் கலவரம் ஏற்பட வாய்புள்ளது. இது குறித்து சக்கணன் என்பவர் 24.8.14-ம் தேதி கொடுத்த புகார் பதிவு செய்யப்பட்டது. 25.8.14-ம் தேதி இரு தரப்பினரும் வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பின் காரணமாக 7.9.14-ம் தேதி அழைத்து எச்சரிக்கப்பட்டார்கள். இருந்தும் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

பொது அமைதியை கட்டுக்குள்வைத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில் விழுப்பனூர் க.தங்கவேல், பாட்டக்குளம் கு.கடற்கரை, க.ராமர், கு.சங்கிலிபாண்டி, கு.கருப்பசாமி, பா.கண்ணன், கு.முருகன், ரா.சிவா, க.வீரகுமார், சீ.அண்ணாத்துரை ஆகியோர் மீது குற்ற தடுப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →