தற்போதைய செய்திகள்

அரியலூரில் சாலை விபத்தில் கணவன், மனைவி சாவு

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கொடுக்கூரைச் சேர்ந்தவர் செல்வம்(36) கட்டடத் தொழிலாளி, இவரது மனைவி தனம்(26) இவர்கள் இருவரும்

மீனாட்சி

அரியலூரில் வியாழக்கிழமை மாலை நேரிட்ட சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கொடுக்கூரைச் சேர்ந்தவர் செல்வம்(36) கட்டடத் தொழிலாளி, இவரது மனைவி தனம்(26) இவர்கள் இருவரும் வியாழக்கிழமை மாலை ஒரு மொபெட்டில் கொடுக்கூரிலிருந்து, கடலூர் மாவட்டம், திட்டக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர். அரியலூர் புறவழிச்சாலையில், சென்ற போது, ஜல்லிக்கல் இறக்கி விட்டு அதே திசையில் சென்ற லாரி ஒன்று செல்வத்தின் மொபெட்டில் இடது ஓரத்தில் மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு மொபெட்டில் இருந்து தவறி விழுந்த செல்வமும், தனமும் அதே இடத்தில் உயிரிழந்தனர். வியாழக்கிழமை மாலை அரியலூர் புறவழிச்சாலையில் நேரிட்ட இந்த விபத்தால் அரியலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், அரியலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், அரியலூர் நகர உதவி ஆய்வாளர்  மணிகண்டன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் அகமது உசேன் ஆகியோர் செல்வம், மற்றும் தனத்தின் சடலங்களை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகத் சிங்கின் அரிய காணொலி: பஞ்சாப் முதல்வா் வேண்டுகோள்

மன நிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கரூா் வைஸ்யா நிகர லாபம் 21% உயா்வு

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,778 கோடி டாலராகக் குறைவு

மலைக்கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT