தற்போதைய செய்திகள்

விருது நகர் உள்ளாட்சி இடைத்தேர்தல்: அமைதியான வாக்குப் பதிவு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாகவுள்ள 3 நகராட்சி உறுப்பினர்கள் உள்பட 24 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அமைதியான முறையில்  வாக்கு பதிவு நடந்து முடிந்தது. இதில், ஊரக

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாகவுள்ள 3 நகராட்சி உறுப்பினர்கள் உள்பட 24 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அமைதியான முறையில்  வாக்கு பதிவு நடந்து முடிந்தது. இதில், ஊரக பகுதியில் 76.06 சதவீதமும், நகராட்சி பகுதியில் 66.01 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 98 பதவிகளில், 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட 74 பதவிகளுக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.இதில், விருதுநகர் நகராட்சியில் காலியாக உள்ள 10,21,34 ஆகிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைதேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு பதிவு 4 வாக்குச் சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரையில் அமைதியான முறையில் நடைபெற்றது.

இத்தேர்தலில் நகராட்சி பகுதியில் மட்டும் வாக்கு பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. வாக்கு பதிவு தொடங்கிய சிறிது நேரத்திற்கு பின்னரே   பொதுமக்கள் கூட்டமாக வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில், வாக்கு பதிவு நேரத்தின் போது பா.ஜ.கவினர் பணம் பட்டுவாடா செய்வதாகவும், வாக்காளர்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்குவதற்கு டோக்கன் வழங்குவதாகவும் கூறி அவ்வப்போது பிரச்னைகளில் ஈடுபட்டனர். அதை போலீஸார் தலையிட்டு சமதானம் செய்து வைத்தனர்.

இதேபோல், சாத்தூர் ஒன்றியம்-13 வது வார்டு வட்டார ஊராட்சி உறுப்பினர், திருச்சுழி ஒன்றியம்-11 வது வார்டு வட்டார ஊராட்சி உறுப்பினர், சிவகாசி ஒன்றியம்-8 வது வார்டு வட்டார ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிம்-நதிக்குடி, சாத்தூர் ஒன்றியம்-வெங்கடேஸ்வரபுரம், வத்திராயிருப்பு ஒன்றியம்-காடனேரி மற்றும் கீழக்கோபாலபுரம் ஆகிய கிராமங்களில் ஊராட்சி தலைவர் பதவிக்கும், சிற்றூராட்சிகளில் காலியாக உள்ள 14-வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் வாக்கு பதிவு சீட்டுக்கள் பயன்படுத்தி வாக்கு பதிவு நடைபெற்றது.

இத்தேர்தலுக்காக 3 வட்டார ஊராட்சி வார்டு பதவிகளுக்கு 40 வாக்குச்சாவடிகளும், 14 கிராம வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 14 வாக்குச் சாவடிகளும், 4 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 13 வாக்குச்சாவடிகளும், 3 நகராட்சி உறுப்பினர் பதவிக்களுக்கு 4 வாக்குச்சாவடிகள் என 71 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில், 284 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோல், வாக்குச் சாவடி மையங்களில் பிரச்னைகள் ஏற்பாடத வகையில் 500 போலீஸாருக்கு மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், நகராட்சி பகுதியில் வாக்கு பதிவு முடிந்ததும் வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸார் பாதுகாப்புடன் நகராட்சி அலுவலக கூட்டரங்கத்திற்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அதோடு, அந்த அறையை உதவி தேர்தல் அலுவலர் மற்றும் ஆணையாளர்(பொறுப்பு) மணி உள்ளிட்ட அலுவலர்கள் பூட்டி சீல் வைத்து அரசியல் கட்சியினர் முன்பு பூட்டப்பட்டது.

அதேபோல், வட்டார ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு பதிவான வாக்கு பெட்டிகள் அந்தந்த பகுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படடன. வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முன்பும், நுழைவு வாயில் பகுதி மற்றும் சுற்று பகுதிகளில் என மூன்று அடுக்கு முறையில் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட இருப்பதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT