ஸ்ரீவில்லிபுத்தூர் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு: இரு இடங்களில் சாலை மறியல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலையில், நகராட்சியின் குடிநீரும் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நகராட்சி சீராக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று கூறி இரு இடங்களில் திடீர் சாலை மறியில் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு: இரு இடங்களில் சாலை மறியல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலையில், நகராட்சியின் குடிநீரும் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நகராட்சி சீராக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று கூறி இரு இடங்களில் திடீர் சாலை மறியில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலையில், நகராட்சியின் குடிநீரும் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நகராட்சி சீராக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று கூறி இரு இடங்களில் திடீர் சாலை மறியில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. அக்கினி நட்சத்திர வெயிலைவிட வெயில் கொடுமை அதிகமாக உள்ளது. நகரில் 75 சதவீதத்தினர் வீடுகளில் போர்களில் தண்ணீர் இல்லை. பணம் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கிடைக்கும் என்றால், அதற்கும் ஒரு நாள் முன்னதாகவே சொன்னால்தான் தண்ணீர் கிடைக்கும் நிலை.
இந்நிலையில் நகராட்சியின் குடிநீர் ஆதாரமான பேயனாற்றுப் படுகையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத நிலை. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சராசரியாக கிடைக்க வேண்டிய தண்ணீரை விட பாதி அளவே கிடைக்கிறது. இதிலும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுவிட்டால், அதனை கண்டுபிடித்து செப்பனிட்டு மீண்டும் குடிநீர் விநியோகம் செய்ய 2 முதல் 3 நாட்கள் ஆகிவிடுகிறது. இதனால் நகரில் நகராட்சியால் சீராக குடிநீர் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரின் சில பகுதிகளில் தினமும் தங்களுக்கு நகராட்சி குடிநீர் தரவில்லை என்று கூறி திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நகராட்சி 3-வது வார்டு பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என்று கூறி ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 30 நிமிடம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மாதாங்கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 20 நாட்களாக நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி பஸ்நிலையில் முன்பு காலி குடங்களுடன் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ்நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல் நிலையத்திற்கு வந்து பேசும்படி கூறினார்கள்.
இதற்கு எம்.எல்.ஏ. பொன்னுப்பாண்டி, ஆட்சேபம் தெரிவித்து நகராட்சி அலுவலர்கள் இங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றார். டி.எஸ்.பி. முரளிதரன் சம்பவ இடத்திற்கு வந்து மாலை 5 மணிக்குள் குறிப்பிட்ட பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இது குறித்து பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், தண்ணீர் கஷ்டம் கடுமையாகத்தான் உள்ளது. இருந்தாலும், நகராட்சி ஆணையாளர் மற்றும் குடிநீர் விநியோக மேற்பார்வையாளரின் அலட்சியத்தால்தான் நகரில் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கிடைக்கும் நீரை பகர்ந்து அளித்து நிர்வாகம் செய்ய இவர்களால் இயலவில்லை. இவர்களால் தமிழக அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றார் அவர்.