தற்போதைய செய்திகள்

லாபத்தில் இயங்கும் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது: எஸ்.என்.ராஜூ

விருதுநகர் தனியார் அரங்கத்தில் மதுரை மண்டல அளவிலான பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 21-வது பொது மாநாடு 20,21 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.இதில், ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநாட்டில் பங்கேற்ற

எஸ். பாண்டியன்

லாபத்தில் இயங்கும் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க கூடாது என அகில இந்திய பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.என்.ராஜூ தெரிவித்தார்.

விருதுநகர் தனியார் அரங்கத்தில் மதுரை மண்டல அளவிலான பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 21-வது பொது மாநாடு 20,21 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.இதில், ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநாட்டில் பங்கேற்ற அகில இந்திய பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.என்.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொது இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து ரூ.43,292 கோடி பிரிமியம் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பொது இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.2900 கோடி லாபம் கிடைத்துள்ளது. மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று உண்மையான, நேர்மையான முறையில் 90 சதவீதம் வரையில் இழப்பீட்டு தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இன்ஸ்சூரன்ஸ் துறையில் உலக அளவில் 3-ம் இடம் பெற்றுள்ளது. இதுபோன்று சிறப்பாக செயல்பட்டு வரும் பொது இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்க மக்களவையில் மசோதா கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

அதேபோல், பொது இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதமாக இருந்தது. தற்போது, அதை 49 சதவீதமாக உயர்த்தி மக்களவையில் சட்ட மசோதா கொண்டு வர இருப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். இதற்கு இச்சங்கம் மேற்கொண்ட வலுவான எதிர்ப்பு இயக்கம் மற்றும் கருத்து திரட்டலின் பின்னணியில் ஏற்கனவே இச்சட்ட மசோதா கொண்டு வருவதை தடுக்கும் வகையில் 1.50 கோடி பேரிடம் கையொழுத்து பெற்று மக்களவைக்கு அனுப்பி வைத்தோம். அதையடுத்து, இந்திய அளவில் 17 ஆயிரம் முக்கிய பிரமுகர்களிடம் கையொழுத்து பெற்று அனுப்பி வைத்துள்ளோம். இதற்கு மத்திய அரசு கட்டாயம் மதிப்பு அளிக்க வேண்டும். மேலும், இந்த மசோதவை மக்களவையில் கொண்டு வரக் கூடாது என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் 2 கோடி பேரிடம் கையொழுத்து பெற்று அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்போது உடன் தென் மண்டல பொது இனஸ்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.ஆனந்த், மதுரை மண்டல பொது இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜவஹர் உள்ளிட்டோர் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT