முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நகரமன்ற இருவார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வெற்றி

சிதம்பரம் நகரமன்ற 17வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட தன.ராஜேந்திரனும், 20வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட சிவ.அன்பழகன் ஆகியோர் வெற்றி

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:50 AM
பகிர்:

சிதம்பரம் நகரமன்ற 17வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட தன.ராஜேந்திரனும், 20வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட சிவ.அன்பழகன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

சிதம்பரம் நகராட்சியில் வார்டு 17 உறுப்பினர், வார்டு 20 உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் செப்.18-ம் தேதி நடைபெற்றது. 17வது வார்டில் தன.ராஜேந்திரன் (அதிமுக), சத்தியநாராயணன் (மார்க்சிஸ்ட் கம்யூ) வெங்கடேசன் (பாஜக) ஆகிய மூவரும், 20வது வார்டில் சிவ.அன்பழகன் (அதிமுக), சிவ.ராஜ்குமார் (மார்க்சிஸ்ட் கம்யூ), திருவேங்கடம் (பாஜக) ஆகிய மூவரும் போட்டியிடிட்டனர். வாக்கு எண்ணிக்கை சிதம்பரம் நகரமன்றக் கூடத்தில் தேர்தல் அலுவலரும், ஆணையாளருமான பொறுப்புமான ஆர்.செல்வராஜ் முன்னிலையில் திங்கள்கிழமை எண்ணப்பட்டது. இதில் 17 வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தன.ராஜேந்திரனும், 20 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சிவ.அன்பழகன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்: வார்டு-17: மொத்த வாக்குகள்-988, தன.ராஜேந்திரன் (அதிமுக)- 710, சத்தியநாராயணன்  (மார்க்சிஸ்ட் கம்யூ)- 248, வெங்கடேசன் (பாஜக)- 30. வார்டு-20: மொத்த வாக்குகள் -1058, சிவ.அன்பழகன் (அதிமுக)- 877, சிவ.ராஜ்குமார் (மார்க்சிஸ்ட் கம்யூ)-116, திருவேங்கடம் (பாஜக)-65. சிதம்பரம் நகரமன்ற இரு வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்த அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் நிர்வாகிகள் வெடி, வெடித்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் சொ.ஜவகர், நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், சி.கே.சுரேஷ்பாபு, எம்.ஜி.பாரி, குமார், மார்க்கெட் நாகராஜ், கருப்பு ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.