பண்ருட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் : சுயேட்சைகள் வெற்றி
பண்ருட்டி வட்டத்துக்கு உட்பட்ட வல்லம் ஊராட்சி மன்றத் இடைத் தேர்தலில் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை 1,262 வாக்குகள் பெற்று ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பண்ருட்டி வட்டத்துக்கு உட்பட்ட வல்லம் ஊராட்சி மன்றத் இடைத் தேர்தலில் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை 1,262 வாக்குகள் பெற்று ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பண்ருட்டி ஒன்றியம் வல்லம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை, பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது
5 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஏழுமலை 1,262 வாக்குகளும், இளங்கோ 790 வாக்குகளும், ரவி 346 வாக்குகளும், ராஜேஸ்லவரி 48 வாக்குகளும் பெற்றனர். செல்லாத வாக்குகள் 19.
இதன்படி, ஊராட்சி மன்றத் தலைவராக ஏழுமலை தேர்வு செய்யப்பட்டார். இவர் 2001 - 2011 வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றியவர்.
இதே போல, அண்ணா கிராம ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் கவரப்பட்டு 7வது வார்டு உறுப்பினர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி அண்ணா கிராம ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில், ஸ்ரீராம் 133, சச்சிதானந்தம் 98, முருகன் 12 வாக்குகளை பெற்றனர். செல்லாத வாக்குகள் 5. இதன்படி, ஸ்ரீராம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.