விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி உறுப்பினர், வட்டார ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வெற்றி
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சியில் காலியாக உள்ள 24 பதவிகளுக்கான இடைத்தேர்தலில் நகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் வட்டார ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சியில் காலியாக உள்ள 24 பதவிகளுக்கான இடைத்தேர்தலில் நகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் வட்டார ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாகவுள்ள 24 பதவிகளுக்கு கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வாக்குகள் எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கு இடையே திங்கள்கிழமை காலையில் நடைபெற்றது. இத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரம் வருமாறு:
விருதுநகர் நகராட்சி: விருதுநகர் நகராட்சி 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு எம்.செய்யது இப்ராஹூம்(அதிமுக) 456 வாக்குகளும், இவரை எதிர்த்து போட்டியிட்ட சாதிக் அலி(சுயே) 245 வாக்குகளும் பெற்றனர். 21-வது வார்டு உறுப்பினராக ஐ.மருது(அதிமுக)-339, ஞானசிகாமணி(பா.ஜ.க)-195, 34-வது வார்டு உறுப்பினராக எம்.வாடியான்பாலன்(அதிமுக), கே.எம்.முருகன்(சுயே)-383 வாக்குகளும் பெற்றனர். இந்த மூன்று வார்டுகளிலும் அதிமுக உறுப்பினர்களே தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்வு முடிவுகள் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 20 நிமிடங்களிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
வட்டார ஊராட்சி உறுப்பினர் பதவி: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 8-வது வார்டு வட்டார ஊராட்சி உறுப்பினராக ஆர்.முத்துராஜ்(அதிமுக)-2233 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட ஐ.கணேசன்(சுயே)-1756 வாக்குகளும் பெற்றார். சாத்தூர் ஊராட்சி ஒன்றிய 13-வது வார்டு வட்டார ஊராட்சி உறுப்பினராக வே.பெரியசாமி(அதிமுக)-1890 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட பெ.ராஜமாணிக்கம்(பா.ஜ.க)-1436 வாக்குகளும் பெற்றனர். திருச்சுழி ஒன்றிய 11-வது வார்டு வட்டார ஊராட்சி உறுப்பினராக மு.ஜெயலட்சுமி(அதிமுக)-1560, மா.லெட்சுமி(சுயே)-695 வாக்குகளும் பெற்றனர். இந்த மூன்று வார்டுகளிலும் அதிமுக உறுப்பினர்களே தேர்வு செய்யப்பட்டனர்.
ஊராட்சி தலைவர் பதவி: வத்திராயிருப்பு ஒன்றியத்தில் காடனேரி ஊராட்சி தலைவராக சீனிகுருசாமி, கீழக்கோபாலபுரம் ஊராட்சி தலைவராக ஆ.கிருஷ்ணசாமி, வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடி ஊராட்சி தலைவராக சி.மாரிமுத்து, சாத்தூர் ஒன்றியம் வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி தலைவராக கே.பாலசந்தர் ஆகியோரும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவி: வத்திராயிப்பு ஒன்றியம் மேலக்கோபாலபுரம் 8-வது வார்டு உறுப்பினராக பெ.விநாயகமூர்த்தி, கான்சாபுரம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக மு.வேல்மயில், விருதுநகர் ஒன்றியம் கோட்டநத்தம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினராக து.ஆறுமுகம், கட்டனார்பட்டி ஊராட்சி 4-வது உறுப்பினராக சி.பாண்டியராஜன், திருச்சுழி ஒன்றியம், திருச்சுழி ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினராக மோ.ரகுராமசக்கரவர்த்தி, சிவகாசி ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினராக கே.பி.என்.பாண்டியராஜன், லெட்சுமிநாராயணபுரம் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக வே.ஆனந்தபாபு,
சாத்தூர் ஒன்றியம் பாப்பாக்குடி 6-வது வார்டு உறுப்பினராக பா.உமாமகேஸ்வரி, சின்னகொல்லபட்டி ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினராக டி.மாரிச்சாமி, ராஜபாளையம் ஒன்றியம் சுந்தரராஜபுரம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக எம்.ஜெயக்குமார், சோழபுரம் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினராக ம.பாக்கியலட்சுமி, சமுசிகாபுரம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராக குருசாமி, நரிக்குடி ஒன்றியம் இசலி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக செ.லெட்சுமி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் கூனம்பட்டி 1-வது வார்டு உறுப்பினராக கு.ராஜேஸ்வரியும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
இடைத்தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த நகராட்சி, ஊராட்சி ஒன்றிய, கிராம ஊராட்சி குழு கூட்டம் கூடுகிற நாளில் பங்கேற்று பதவியேற்க உள்ளதாக உதவி தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.