முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கிராம உதவியாளர் பணிக்கு பரிந்துரை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர்  வட்டாட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட இருப்பதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Updated On : 22 செப்டம்பர், 2014 at 7:15 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:20 PM

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர்  வட்டாட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட இருப்பதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி்க் குறிப்பு விவரம்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் நாச்சியார்கோவில், துலுக்கப்பட்டி,   கோட்டையூர் ஆகிய கிராமங்களி்லும், சாத்தூர் வட்டத்தில் எம்.சொக்கலிங்காபுரம், ராவுத்தன்பட்டி, அய்யம்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, முத்தாண்டியாபுரம், சூரங்குடி, சந்தையூர், துலுக்கங்குறிச்சி, ஏழாயிரம்பண்ணை, கங்கரக்கோட்டை ஆகிய கிராமங்களில் கிராம உதவியாளர் பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்பணியிடத்திற்கு கல்வித் தகுதியாக 5-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10ம் வகுப்பு வரையில் தோல்வி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், 1.7.2014 அன்றைய தேதியில் எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.எ ஆகியோருக்கு 35 வயதிற்குள்ளும், பி.சி, எம்.பி.சி ஆகியோருக்கு 32 வயதிற்குள்ளும், ஓ.சி பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

எனவே மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு அக்குறிப்பிட்ட வட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அசல் சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அட்டை ஆகியவைகளுடன் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகிற 25-ம் தேதி நேரில் வந்து தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.