முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்து நெல்லையில் தமமுக ஆர்ப்பாட்டம்

இலங்கையில் இனப்படுகொலை நடத்திய அதிபர் ராஜபட்சவை ஐக்கிய நாடுகள் சபையில் செப். 25 ஆம் தேதி பங்கேற்க அனுமதிக்கக்கூடாது. இக்கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:50 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் இலங்கை அதிபரை கண்டித்து செவ்வாய்க்கிழமை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கையில் இனப்படுகொலை நடத்திய அதிபர் ராஜபட்சவை ஐக்கிய நாடுகள் சபையில் செப். 25 ஆம் தேதி பங்கேற்க அனுமதிக்கக்கூடாது. இக்கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.கே.டி. கண்மணி மாவீரன் தலைமை வகித்தார். கட்சியின் நிர்வாகிகள் கிங்தேவேந்திரன், பொட்டல் கண்ணன், எம்.எம். லாரன்ஸ், எஸ். ஆறுமுகம், கே.பி.எஸ். முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் அ. வியனரசு, பத்திரிக்கை உதவி ஆசிரியர் சண்முகசுந்தர், ஏ.கே. நெல்சன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஜி. துரைபாண்டியன், கே. தங்கராஜ், ஜி.வி. பெருமாள்பாண்டியன்,எஸ். சிவக்குமார், ஏ. தங்கராஜ்பாண்டியன், கணேசன், சீதாராமன், அழகர்சாமி, அருள்ராஜ், அன்பழகன் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →