முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் ஒன்றேகால் கிலோ தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

மதுரை விமான நிலையத்தில் நேற்று இரவு ஒன்றேகால் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:50 AM
பகிர்:

மதுரை விமான நிலையத்தில் நேற்று இரவு ஒன்றேகால் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்தவர் அபுதுல் வஹாப்(40). இவர் துபாயில் இருந்து கொழும்பு வந்து கொழும்புவில் இருந்து மதுரைக்கு வந்தார். இவரிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, இவர் கொண்டு வந்த டேபிள் ஃபேன், ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்களில் சிறிய சிறிய கட்டிகளாக தங்கத்தை மறைத்து வைத்து, கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதை அடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.