ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் கொடூர கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள எஸ்.கொடிக்குளம் கண்மாயின் தென்கரைக்கு கீழ் ஒரு பெண் சடலம் கிடப்பதாய் கிராம நிர்வாக அலுவலர் இந்திராகாந்திக்கு செவ்வாய்கிழமை தகவல் வந்தது. அதன் பேரில்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் கொடூர கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள எஸ்.கொடிக்குளம் கண்மாயின் தென்கரைக்கு கீழ் ஒரு பெண் சடலம் கிடப்பதாய் கிராம நிர்வாக அலுவலர் இந்திராகாந்திக்கு செவ்வாய்கிழமை தகவல் வந்தது. அதன் பேரில்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, பாதி எரிந்த நிலையில் கிடைந்தது செவ்வாய்கிழமை தெரியவந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள எஸ்.கொடிக்குளம் கண்மாயின் தென்கரைக்கு கீழ் ஒரு பெண் சடலம் கிடப்பதாய் கிராம நிர்வாக அலுவலர் இந்திராகாந்திக்கு செவ்வாய்கிழமை தகவல் வந்தது. அதன் பேரில் அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது சுமார் 55 வயது மதிக்கத் தக்க பெண், அரக்குக் கலர் ஜாக்கெட், ஊதா கலர் பாவடை, சந்தனக் கலரில் ஊதா பூப்போட்ட சேலை கட்டியநிலையில் சடலமாக கிடந்தார். அவரது முகத்திலும் தலையின் பின் பகுதியிலும் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது. மேலும் வலது முகம், நெஞ்சு, வயிறு பகுதிகல் பாதி எரிந்த நிலையில் இருந்தது.
இது குறித்து இந்திராகாந்தி, கூமாப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.