சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சுப்பிரமணி தலைமை வகித்தார். விருதுநகர் ஒன்றியச் செயலாளர் சக்கரை முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் எம்.மகாலட்சுமி தொடங்கி வைத்தார். இதில், சுமைப்பணியாளர்கள் பயனடையும் வகையில் தனி நலவாரியம் அமைக்க வேண்டும். உணவு உண்ண, ஓய்வு எடுக்கவும் சாலையோரங்களில் கொட்டகை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். 60 வயதான சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் ஓய்வூதியம் அளிக்க வேண்டும். டாஸ்மாக், உணவு தானிய கிடங்கு, அரசு குடோன் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ, இ.பி.எப் திட்டத்தை அமுல்படுத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாநில குழு உறுப்பினர் ஆர்.பாலசுப்பிரமணியம், சம்மேளன உதவி தலைவர் ஜே.லாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை நிறைவாக சி.ஐ.டி.யு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.அசோகன் முடித்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.