தற்போதைய செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொட்டியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(50). இவர் கடந்த 21.10.2011 அன்று இக்கிராமத்தில் திருவிழா நடந்துள்ளது. அப்போது, இவரது

எஸ். பாண்டியன்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள்  சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தின் நீதிபதி பத்மா தீர்ப்பு வழங்கினார். 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொட்டியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(50). இவர் கடந்த 21.10.2011 அன்று இக்கிராமத்தில் திருவிழா நடந்துள்ளது. அப்போது, இவரது நெருங்கிய உறவினரின் மகளான 4 வயது சிறுமியை வீட்டிலிருந்து மிட்டாய் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்றாராம். பின்னர் அக்கிராமத்தின் பாலப்பகுதியின் மறைவிடத்திற்கு கூட்டிச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது தொடர்பாக பெற்றோர்களிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம். இந்த நிலையில் பெற்றோர்களிடம் சிறுமி நடந்த சம்பவத்தை கூறியுள்ளது. இதையடுத்து திருச்சுழி காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் செய்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி(பொறுப்பு) பத்மா சிறுமியை பாலியல் பாலாத்காரம் செய்த குற்றத்திற்காக கணேசனுக்கு 10 ஆண்டுகளும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 4 ஆண்டுகளும் சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, போலீஸார் பாதுகாப்புடன் கணேசனை அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT