முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அம்மா உணவகம் மற்றும் அரசு மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்!

சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 30 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்டப்பட்டு, அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:52 AM
பகிர்:

சிதம்பரம் நகரில் அமைக்கப்பட்டு வரும் அம்மா உணவகம் மற்றும் காமராஜர் அரசு மருத்துவமனை ஆகியவற்றை கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 30 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்டப்பட்டு, அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வியாழக்கிழமை அம்மா உணவகத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி கட்டட ஆய்வாளர் அருள்செல்வம், பணி மேற்பார்வையாளர் செந்தில் ஆகியோர் உடன் சென்றனர். பின்னர் ஆட்சியர் அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி பார்வையிட்டு, அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் விபரங்களை கேட்டறிந்தார். அவருடன் மருத்துவமனை தலைமை மருத்துவர் அமுதா உடன் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.