முகப்பு
தற்போதைய செய்திகள்

சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு இருந்த அரிசி லாரி கடத்தல்

ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து சென்னைக்கு 25 கிலோ எடையுல்ள 680 அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை டிரைவர் ராமசந்திரன்(55) பெத்திக்குப்பம் போக்குவரத்து சோதனை சாவடியில்

தற்போதைய செய்திகள்

சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு இருந்த அரிசி லாரி கடத்தல்

ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து சென்னைக்கு 25 கிலோ எடையுல்ள 680 அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை டிரைவர் ராமசந்திரன்(55) பெத்திக்குப்பம் போக்குவரத்து சோதனை சாவடியில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:54 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் சோதனைச் சாவடியில் ஆவணங்களை சரிபார்க்க நிறுத்தப்பட்ட அரிசி ஏற்றி வந்த லாரியை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை கடத்தி சென்றனர்.

ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து சென்னைக்கு 25 கிலோ எடையுல்ள 680 அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை டிரைவர் ராமசந்திரன்(55) பெத்திக்குப்பம் போக்குவரத்து சோதனை சாவடியில் நிறுத்தி வாகன ஆவணங்களை சரிபாக்க சென்று திரும்பி வந்து பார்க்கையில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மாதர்பாக்கம் பகுதியில் லாரி ஒன்று கேட்பாரற்று கிடந்த நிலையில் அங்கு சென்று பார்த்த போது அது கடத்தப்பட்ட அரிசி லாரி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து லாரி டிரைவர் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை எடுத்து சென்றார்.

பெத்திக்குப்பத்தில் இருந்து லாரியை கடத்திய நபர்கள் எங்கே பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் 16 கி.மீ தொலைவில் உள்ள மாதர்பாக்கம் வரை சென்று அங்கு லாரியை நிறுத்தி விட்டு சென்றுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →