முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு பேருந்து மோதிய விபத்து: இரு கல்லூரி மாணவர்கள் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் செ.மரிய ஆல்பர்ட்ராஜ். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியில் இருந்தபோதே உடல் நலக் குறைவு காரணமாக இறந்துவிட்டார். இவரது மனைவி ஜோஸ்பின்மேரி. இவர் மேலாண்மறைநாட்டில் உள்ள ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு முகிலன் (20) என்ற மகனும் ஒரு மகளும் உண்டு. முகிலன் பாளையங்கோட்டையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் முதலாண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார்.

சிவகங்கை, செந்தமிழ்நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சரவணன் (21). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சரவணனின் நண்பர்கள் வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்துள்ளார்கள். இதில் முகிலனுடன் சரவணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரவணன் வீட்டில் சென்னைக்குச் செல்வதாக கூறிவிட்டு, வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிப்பில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு வந்துள்ளார்.

வியாழக்கிழமை ராஜபாளையத்தில் ஒரு புதிய திரைப்படம் வெளியாவதாக அறிந்து நண்பர்கள் அனைவரும் சென்றுள்ளார்கள். ஆனால் படம் திரையிடப்படாததால் திரும்பியுள்ளார். இதில் முகிலன் மற்றும் சரவணன் ஆகியோர் ஒரு இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்துள்ளார்கள். எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கை அடுத்து வந்து கொண்டிருந்தபோது, எதிரே மதுரையிலிருந்து குற்றாலம் நோக்கி சென்ற அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் முகிலன் மற்றும் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வன்னியம்பட்டி போலீஸார் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஏசுதாஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →