திருச்சி: மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.200 கிராம் தங்கம் திருச்சியில் பறிமுதல்
மலேசியாவிலிருந்து சலவைப்பெட்டி கைப்பிடிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியாவிலிருந்து சலவைப்பெட்டி கைப்பிடிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியாவிலிருந்து சனிக்கிழமை திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் சென்னையைச் சேர்ந்த பயணிகள் இருவரின் உடமைகளுக்குள் கடத்தல் பொருள் இருப்பதை ஸ்கேனர் கருவி சமிக்ஞை ஒலி முலம் காண்பித்தது. இதனையடுத்து பொருட்களை பிரித்து சோதனை மேற்கொண்டதில் சென்னையைச் சேர்ந்த பஷீர்அகமது என்ற பயணி கொண்டு வந்திருந்த சலவைப்பெட்டி (அயர்ன்பாக்ஸ்) கைப்பிடிக்குள் 500 கிராம் தங்கத்தை கம்பிபோல உருக்கி மறைத்து கடத்தி வந்திருந்தார்.
அதேபோல சென்னையைச் சேர்ந்த மற்றொரு பயணி சோபர்ஸ்கான் என்பவர் தனது பெட்டிக்குள் 550 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருந்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த இம்ரான்கான், சர்புதின் ஆகிய இரு பயணிகளும் அலங்காரப் போருட்களுக்குள் மறைத்து தலா 100 கிராம் வீதம் 200 கிராம் தங்கத்தை கடத்தி வந்திருந்தனர். சனிக்கிழமை ஒரே விமானத்தில் மட்டும் 4 பேர் 1.200 கிலோ எடையுள்ள ரூ. 30 லட்சம் தங்கத்தை கடத்தி வந்து அவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதே நாளில் மலிண்டோ விமானத்தில் 100 கிராமும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 500 கிராம் என மேலும் 600 கிராம் தஙகமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.