ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 3 பேர் திருச்சி வந்தனர்
ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹெளதி இனத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தீவிர மோதல் நடைபெற்று வருகிறது.
ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹெளதி இனத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தீவிர மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டில் சிக்கியிருக்கும் 4,000 இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 20 தமிழர்கள் உள்ளிட்ட 452 பேர் மீட்கப்பட்டு இன்று அதிகாலை மும்பை மற்றும் கொச்சி விமான நிலையங்களுக்கு வந்து சேர்ந்தனர். இதில் திருச்சியை சேர்ந்த 3 பேர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றனர். திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (35) கருமண்டபத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன், திருச்சி வயலூரை சேர்ந்த கணேஷமூர்த்தி ஆகியோர் திருச்சி வந்தடைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் ஏமனில் பவர் கம்பெனியில் பணியாற்றியதாகவும் அங்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் அங்கிருந்து படகு மூலம் ஏடானுக்கு சென்று பின்னர் இந்திய கடற்படை கப்பல் மூலம் மும்பை வந்து அங்கிருந்து சென்னை சென்று விமானம் மூலம் திருச்சி வந்தடைந்ததாக கூறினர்.