தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அக்னீஸ்வரர் சுவாமி கோவிலில் இரவு காவலாளியாக பணியாற்றிய செல்வராஜ் (55) இன்று காலை அக்கோவிலின் அம்மன் சன்னதி அருகே கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்திவருகின்றனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறும் போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அம்மன் சன்னதி கதவிலும் அக்னீஸ்வரர் கோவிலின் சாமி சன்னதி கதவிவிலும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. சன்னதியில் எந்த பொருளும் திருட்டு போனதாக தெரியவில்லை. உண்டியல் பணம் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உண்டியல் பணத்தை திருட வந்த மர்ம நபர்கள் செல்வராஜை கொலை செய்து விட்டு தப்பி சென்றிருகலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது என போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.