வி.கே. புரம் அருகே ஆட்டுக்குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை: பொதுமக்கள் பீதி
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை ஊருக்குள் புகுந்து வீட்டில் கட்டியிருந்த ஆட்டுக்குட்டியை கடித்து கொன்றது. இதனால் மலையடிவாரக்
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை ஊருக்குள் புகுந்து வீட்டில் கட்டியிருந்த ஆட்டுக்குட்டியை கடித்து கொன்றது. இதனால் மலையடிவாரக் கிராம மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
விக்கிரமசிங்கபுரம் அருகே டாணா, அனவன்குடியிருப்பு பகுதியில் பொத்தையில் சிறுத்தை ஒன்று குட்டிகளுடன் உலா வருகிறது. இந்த சிறுத்தை குட்டிகளுடன் மலையடிவாரப் பகுதியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அண்மையில் இப்பகுதியில் உலா வந்த சிறுத்தையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் பயனாக சிறுத்தை அட்டகாசம் குறைந்திருந்தது. சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் விக்கிரமசிங்கபுரம் அருகே பொதிகையடிக்குள் புகுந்த சிறுத்தை, தெற்குத் தெருவில் ஆறுமுகம் என்பவர் வீட்டில் கட்டியிருந்த 2 ஆட்டுக்குட்டிகளை கடித்து குதறியது.சிறுத்தையின் உறுமல் சப்தம் கேட்டு பதறிய ஆறுமுகம் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அச்சத்தில் இருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு சிறுத்தை அங்கிருந்து சென்றபிறகு ஆறுமுகம் வெளியே வந்து பார்த்தார். அவர் வீட்டில் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டிகளை கடித்து குதறியிருந்தது.
விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் பகுதியில் உள்ள பொதிகையடி, அனவன்குடியிருப்பு, டாணா, அருணாசலபுரம், திருப்பதியாபுரம், காளிபர்விளை உள்ளிட்ட மலையடிவாரக் கிராமங்களில் தொடர்ந்து சிறுத்தை அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.சிறுத்தை உறுமல் சப்தம் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் அச்சத்தில் உள்ளனர். இரவில் தூக்கத்தை இழந்து தவித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அட்டகாசம் அதிகரிப்பு:
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் மலையடிக் கிராமங்களில் சிறுத்தை, கரடி, யானை போன்ற விலங்குகள் அட்டகாசம் இருந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதால் மான், மிளா போன்ற வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் இரை தேடி காட்டில் இருந்து வெளியேறு ஊருக்குள்
வருவதாக கூறப்படுகிறது.கடந்த சில மாதங்களாக பாபநாசம், வி.கே. புரம் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.