சிறுமிகள் பாலியல் வழக்கு: உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சிறுமிகள் பாலியல் வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் உரிமை கூட்டமைப்பு கோரியுள்ளது.இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமிக்கு அதன் செயலாளர் கோ.சுகுமாரன் அளித்த மனு:
சிறுமிகள் பாலியல் வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் உரிமை கூட்டமைப்பு கோரியுள்ளது.இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமிக்கு அதன் செயலாளர் கோ.சுகுமாரன் அளித்த மனு:
இவ்வழக்கில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்றும் 9 போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் 5 போலீசார் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகளை வைத்து தொழில் நடத்திய கும்பலுடன் செல்போனில் பேசியதை வைத்தும், சிறுமிகள் மூலம் அடையாள அணிவகுப்பு நடத்தி கண்டறிந்தும் போலீசாரை சிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்பலுடன் செல்போனில் பேசியவர்கள் பட்டியலில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என பலரும் இருப்பதாக தெரிய வருகிறது.
சிஐடி போலீஸ் எஸ்.பி. வெங்கடசாமி பாலியல் தொழில் கும்பலுடன் செல்போனில் பேசியவர்களில் 300 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியும் இதுவரையில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால், போலீசார் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்து இந்த வழக்கை முடிக்கும் வகையிலேயே சிஐடி போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது வழக்கில் சிக்கியுள்ள போலீசாரில் பலர் பாலியல் பலாத்கார சம்பவத்தோடு தொடர்பு இல்லாதவர்கள் என்பதும், மேலதிகாரிகளின் அழுத்தத்தின் காரணமாகவே கும்பலுடன் செல்போனில் பேசியவர்கள் என்பதும் தெரிகிறது.
மேலும், சிறுமிகள் பாலியல் பலாத்கார சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும், பலர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசுக்கும், சிஐடி போலீசுக்கும் அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, தாங்கள் இப்பிரச்னையில் தலையிட்டு சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் அனைவரையும் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். தற்போது வழக்கில் சிக்கியுள்ள போலீசாரில் பாலியல் பலாத்கார சம்பவத்தோடு தொடர்பு இல்லாதவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் போக்க வேண்டும்.