தற்போதைய செய்திகள்

விருதுநகரில் இளம்பெண் மாயம்: கணவர் புகார்

விருதுநகரில் 2 குழந்தைகளை விட்டுவிட்டு இளம்பெண் மாயமானதாக கணவர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் செய்தார்.

எஸ். பாண்டியன்

விருதுநகரில் 2 குழந்தைகளை விட்டுவிட்டு இளம்பெண் மாயமானதாக கணவர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் செய்தார்.

விருதுநகரை அடுத்த கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ரகு(35). இவருக்கு மனைவி ஜெயா(30) மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், செவ்வாய்கிழமை மாலையில் வீட்டிலிருந்து திருக்கோயிலுக்கு போய் வருவதாக கூறிச் சென்றாராம். ஆனால், நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் கணவர் ரகு உள்ளிட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து உறவினர், நண்பர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எங்கிருக்கிறார் என்ற தகவல் எதுவும் தெரியவில்லை. இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ரகு புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து திருக்கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT