முகப்பு
தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி

வேளாண் உதவி செயற் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கோரி தாக்கல் செய்த

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:13 AM
பகிர்:

வேளாண் பொறியியல்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனுவை திருநெல்வேலி முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வேளாண் பொறியியல்துறையில் திருநெல்வேலியில் உதவி செயற்பொறியாளராக முத்துக்குமாரசாமி பணி செய்து வந்தார். அத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதில் முத்துக்குமாரசாமிக்கு ஏற்பட்ட நெருக்கடியால் அவர் பிப். 20 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து தற்கொலைக்கு தூண்டுதல், கூட்டுச் சதி, ஊழல் தடுப்பு ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

இம்மாதம் 5 ஆம் தேதி திருநெல்வேலி குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிபதி இருவரையும் ஏப். 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.  சிறையில் இருக்கும் வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில், ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றம் இம்மாதம் 16 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இதனிடையே சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் மு. செந்தில் ஆகியோரின் நீதிமன்ற காவல் இம்மாதம் 17 ஆம் தேதி முடிவடைந்ததை நிலையில், இருவரின் நீதிமன்ற காவல் ஏப் 30 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை புதன்கிழமை மாவட்ட முதன்மை நீதிபதி எம். நசீர்அகம்மது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் வழக்குரைஞர் கதிர்வேல், ஆஜராகி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இவ்வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்குரைஞர் என். சிவலிங்கமுத்து, முத்துக்குமாரசாமியின் தற்கொலை வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால், ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனுவை நீதிபதி நசீர்அகம்மது தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →