முகப்பு
தற்போதைய செய்திகள்

சேரன்மகாதேவியில் விவசாயிகள் உண்ணாவிரதம்

மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை....

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:14 AM
பகிர்:

மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை சேரன்மகாதேவியில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிமுத்தாறு அணையில் பிரதான கால்வாய் பாசனத்தில் சாகுபடிக்கு அணையில் இருந்து கடந்த 2014 இல் டிசம்பர் மாத இறுதியில் 4 மதகுகள் வழியாக பாசனம் பெறும் 24,500 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் மார்ச் 31 ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இதனிடையே இப்பாசனத்தில் குளங்களில் சேமித்து வைத்திருந்த நீரை கொண்டு சேரன்மகாதேவி பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் 2 ஆம் போகம் நடவு செய்தனர். தற்போது கதிர் வரும் நிலையில் நெற்பயிர் காணப்படுகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் நெற்பயிர் கருக வாய்ப்புள்ளது.

மணிமுத்தாறு அணையில் 80 அடிக்கும் அதிகமாக நீர் இருப்பு இருப்பதால் கருகும் நெற்பயிரை காப்பாற்ற தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மணிமுத்தாறு பிரதான கால்வாய் பாசன விவசாயிகள் சேரன்மகாதேவியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு நீர்பாசன சங்கத் தலைவரும், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ வுமான பா. வேல்துரை தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடிஆதித்தன் கோரி்க்கையை வலியுறுத்தி பேசினார்.

சேரன்மகாதேவி ஒன்றிய திமுக செயலர் டி. ஆறுமுகம், நகர திமுக செயலர் ச. பாபநாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் அ. தமிழ்செல்வன், வீரவநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் வி.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →