முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை: ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் வீடு புகுந்து 12 பவுன் நகைகள் மற்றும்

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை: ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் வீடு புகுந்து 12 பவுன் நகைகள் மற்றும்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:14 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் வீடு புகுந்து 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.33 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், மாயாண்டிபட்டி தெருவைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (48). இவரது கணவர் பிலாவடி இறந்துவிட்டார். இவர் தனது மகனுடன் வியாழக்கிழமை ஆண்டாள் கோவிலுக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்பக்க கதவை சீதாலட்சுமி பூட்டாமல் சென்றுவிட்டாராம். திரும்பி வீட்டிற்கு வந்த போது, வீட்டின் திறந்து கிடந்த பின்பக்கத்தின் வழியே வந்து, வீட்டின் பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.1.33 லட்சம் ஆகியவற்றை யாரோ கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் சீதாலட்சுமி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சேத்தூர்-கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் (35) என்பவரைக் கைது செய்து பொருட்கள் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

இவர் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எம். நகரில் குடியிருந்து வரும் மனைவியுடன் உள்ளார். இவர் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உண்டு. ஏற்கனவே ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →