முகப்பு
தற்போதைய செய்திகள்

பெண் வழக்குரைஞரை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் வழக்குரைஞரிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து

தற்போதைய செய்திகள்

பெண் வழக்குரைஞரை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் வழக்குரைஞரிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:15 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் வழக்குரைஞரிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரம் மகள் ஜான்சிராணி (28). வழக்குரைஞர். இவருக்கும் ஆலங்குளம் பழனிச்சாமி மகன் செல்வகுமார் என்பவருக்கும் 29.8.14-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது, 10 பவுன் நகைகள் ரூ.50 ஆயிரம் வரதட்சிணை கொடுத்துள்ளார்கள். இது தவிர்த்து செல்வகுமாருக்கு 2 பவுன் செயின் மற்றும் ரூ.50 ஆயிரத்திற்கான பண்டபாத்திரங்கள் கொடுத்துள்ளார்கள். திருமணம் முடிந்த ஒரு மாதம் கழித்து, செல்வகுமார் மனைவி ஜான்சிராணியைப் பார்த்து நீ அசிங்கமாக, குட்டையாக உள்ளாய் என்று கூறி அவர் மனம் புண்படும்படி பேசி வந்துள்ளார். மேலும் உனது வழக்குரைஞர் படிப்பை பார் கவுன்சிலில் பதியக் கூடாது என்று மிரட்டினாராம். மேலும் உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை என்று கூறி, ராஜபாளையத்தில் உள்ள ஜான்சிராணியின் சகோதரி வீட்டில் கொண்டுபோய் செல்வகுமார் விட்டுவிட்டாராம்.

ஜான்சிராணியின் பெற்றோர், ஊர் பெரியவர்களிடம் இது குறித்து பேசியும், செல்வகுமார் தரப்பு ஒத்துப்போகவில்லையாம். மேலும் கூடுதலாக 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் கேட்டார்களாம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜான்சிராணி, அவரது கணவர் செல்வகுமார் மற்றும் இதற்கு உடைந்தையாக இருந்த மாமனார் பழனிச்சாமி மற்றும் மாமியார் ஜான்சிராணி ஆகியோர் மீது சனிக்கிழமை புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →