ஸ்ரீவில்லிபுத்தூரில் சூறாவளி காற்று: 53 மின் கம்பங்கள் சேதம்: மின் இணைப்பு பாதிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீசிய சூறாவளிக் காற்றுக்கு 53 மின் கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்தது. இதனால் 6 கிராமங்களுக்கான மின் இணைப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் சூறாவளி காற்று: 53 மின் கம்பங்கள் சேதம்: மின் இணைப்பு பாதிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீசிய சூறாவளிக் காற்றுக்கு 53 மின் கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்தது. இதனால் 6 கிராமங்களுக்கான மின் இணைப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீசிய சூறாவளிக் காற்றுக்கு 53 மின் கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்தது. இதனால் 6 கிராமங்களுக்கான மின் இணைப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதில் கட்டையத்தேவன்பட்டியில் ஒரு தென்னை மரம் மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் கிருஷ்ணபேரியிலும் சூறாவளிக்கு ஒரு வேப்பமரம் மின் கம்பத்தின் மீது விழுந்ததில் மின்சாரம் அப் பகுதில் தடைபட்டுள்ளது.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் கோ.வா.பழனிவேலுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய கடுமையான சூறாவளிக் காற்றுக்கு பாட்டக்குளம், கூனம்பட்டி, பாணாங்குளம் உள்ளிட்ட 6 கிராமங்களில் 23 மின் கம்பங்கள் முறிந்து விழுந்துவிட்டது. 30 கம்பங்கள் சாய்ந்துவிட்டது. இதனால் இப் பகுதிகளில் முழுவதும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. சனிக்கிழமை 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்து அன்றைய தினம் இரவு சில கிராமங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது. தற்போது மின்கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு கிராமத்தில் உள்ள 20 விவசாய இணைப்பு மற்றும் 40 வீடுகளுக்கான இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமைக்குள் பணிகள் நிறைவடைந்து மின் விநியோகம் இப் பகுதியில் சீராகும் என்றார் அவர்.