முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சுகாதார சீர்கேடு, போக்குவரத்து நெரிசல் சீர் செய்யப்படாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு: டிராபிக் ராமசாமி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நிலவும் சுகாதார சீர்கேடு மற்றும் போக்குவரத்து நெரிசல் முதலிய மக்களின் அத்தியாவசிய பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால்

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சுகாதார சீர்கேடு, போக்குவரத்து நெரிசல் சீர் செய்யப்படாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு: டிராபிக் ராமசாமி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நிலவும் சுகாதார சீர்கேடு மற்றும் போக்குவரத்து நெரிசல் முதலிய மக்களின் அத்தியாவசிய பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:15 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நிலவும் சுகாதார சீர்கேடு மற்றும் போக்குவரத்து நெரிசல் முதலிய மக்களின் அத்தியாவசிய பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் உயர்நீதிமன்றத்தை அணுக இருப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறினார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் இருந்து சென்னைக்கு காரில் டிராபிக் ராமசாமி திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தார். தேநீர் குடிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி பகுதியில் இறங்கினார். அங்கு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஏராளமான பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் போலீஸாருடன் டிராபிக் ராமசாமி பேசினார். இதனிடையே போக்குவரத்துக் காவலர்கள் நகரில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகளை கழற்ற ஆரம்பித்தனர்.

பின்னர் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகள், அரசு மருத்துவமனை முன்பு போக்குவரத்திற்கு இடையூராக உள்ள இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்படுள்ளதை அவர் கண்டார். பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் பென்னிங்டன் காய்கறி சந்தைக்குள் செல்ல இயலாத அளவிற்கு அசுத்தங்கள் நிறைந்து காணப்பட்டைக் கண்ட அவர், நகராட்சி ஆணையாளரிடம் செல்போனில் தொடர்பு கொண்டார். ஒரு வாரத்திற்குள் போக்குவரத்திற்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பென்னிங்டன் காய்கறி சந்தை சீர்செய்யப்படாவிட்டால், மதுரையில் உள்ள உயர்நீதிமன்றக் கிளையை அணுக இருப்பதாகக் கூறினார்.

டிராபிக் ராமசாமியின் வருகை ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →