தற்போதைய செய்திகள்

நேபாள நிலநடுக்கச் சம்பவம்: விருதுநகர் பகுதியை சேர்ந்த அச்சக தொழிலாளர்கள் 4 பேர் தவிப்பு

நேபாள நிலநடுக்க சம்பவத்தில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த அச்சகத் தொழிலாளர்கள் 4 பேர் சிக்கி தவித்து வருவதாகவும், அவர்களை சொந்த ஊருக்கு வருவதற்கு அரசு ஏற்பாடு செய்ய

எஸ். பாண்டியன்

நேபாள நிலநடுக்க சம்பவத்தில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த அச்சகத் தொழிலாளர்கள் 4 பேர் சிக்கி தவித்து வருவதாகவும், அவர்களை சொந்த ஊருக்கு வருவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என தொழிலாளர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேபாளத்தில் கடந்த 25-ம் தேதி(சனிக்கிழமை) நிலநடுக்கம் காரணமாக தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பாதிக்கப்பட்டன. ரிக்டர் 7.9 அளவு பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் மற்றும் கோயில் வளாகங்கள் ஆகியவை மண்ணில் புதைந்தன. இதில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சேனையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(35), உறவினரான கனகராஜ் ஆகியோர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நேபாளத்தில் உள்ள காத்மாண்டு பகுதி அச்சகத்தில் பணியாற்றுவதற்காக சென்றார்களாம். அதைத் தொடர்ந்து உறவினரான சுரேஷ் என்பவர் கடந்த 15 நாள்களுக்கு முன்பு சென்றாராம். இதேபோல், சாத்தூர் அருகே தாயில்பட்டியைச் சேர்ந்த ரவிசந்திரன் என்பவரும் காத்மாண்டுவில் இருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள அச்சகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறராம். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் சொந்த ஊருக்கு வரமுடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேரும் சேனையாபுரத்தில் உள்ள குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து எங்கும் செல்ல முடியாமல் இருந்த நிலையில், அச்சகத்தினர் பாதுகாப்பாக  இந்திய எல்லை வரையில் அனுப்பி வைத்ததாகவும், இன்னும் 4 நாள்களில் சொந்தக் கிராமத்தற்கு திரும்பி வந்து விடுவதாகவும் என குறிப்பிட்டுள்ளதாக ரமேஷ் மனைவி சரஸ்வதி தெரிவித்தார். அதேபோல், தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவிசந்திரன் நிலநடுக்கத்தால் வேறு எங்கும் வெளியில் செல்ல முடியவில்லையாம். அதனால் பாதுகாப்பாக அச்சகத்தில் தங்கி இருப்பதாக செல்லிடப்பேசியி்ல் மனைவி பத்மாவை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவி்ததார். இந்நிலையில் நிலநடுக்கத்தால் சிக்கித் தவிக்கும் அச்சக தொழிலாளர்கள் 4 பேரும் சொந்தக் கிராமம் வருவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT