விருதுநகர் மாவட்டத்தில் விபத்தில்லா பட்டாசு ஆலைகளை உருவாக்கும் வகையிலும், பாதுகாப்பாக பணி மேற்கொள்வது தொடர்பாக உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை(இன்று) நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக தொழிலாளர் சுகாதார பாதுகாப்பு மையத்தின் இணை இயக்குநர் கோபாலகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்கள் விபத்தில்லாமல் பாதுகாப்பாக பணியாற்ற வேண்டும்.
தற்காக காளீஸ்வரி கலைக்கல்லூரி வளாகத்தில் உரிமையாளர், மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு மேற்குறிப்பிட்ட நாளில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் மருந்து பொருள்களை கவனத்துடன் கையாள்வது எப்படி என்பது குறித்து காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் நிபுணர்களால் விவரமாக எடுத்துரைக்கப்பட இருக்கிறது.
அதனால் இப்பயிற்சி முகாமில் ஆலை நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.