முகப்பு
தற்போதைய செய்திகள்

மருங்கூர் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு பழுது: மக்கள் அவதி

பன்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்டு மருங்கூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

பன்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்டு மருங்கூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இங்கிருந்த 3 ஆழ்துளை நீர்மூழ்கி கிணறுகள் பழுதடைந்ததால் தண்ணீர் விநியோகிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள ஒரு மோட்டார் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட வேண்டியுள்ளதாலும், 3 மணி  நேரமே மும்முனை மின்சாரம் கிடைப்பதாலும், தண்ணீர் விநியோகிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

பன்ருட்டி ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என பன்ருட்டி ஊராட்சி ஒன்றிய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →