முகப்பு
தற்போதைய செய்திகள்

திருக்கோவிலூரில் லாரி மோதி இளைஞர் 2 பேர் சாவு: சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள தென்பெண்ணையாற்று மேம்பாலத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மணம்பூண்டியில் இருந்து திருக்கோவிலூருக்கு இளைஞர் 2 பேர் ஒரு பைக்கில்

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:20 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள தென்பெண்ணையாற்று மேம்பாலத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மணம்பூண்டியில் இருந்து திருக்கோவிலூருக்கு இளைஞர் 2 பேர் ஒரு பைக்கில் வந்துகொண்டிருந்தனர்.அப்போது திருக்கோவிலூரில் இருந்து மணம்பூண்டி மார்க்கமாக சென்ற லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த இருவரும் உடல் நசுங்கிய நிலையில் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்துக்குக் காரணமான லாரி நிற்காமல் சென்றுவிட்டது. விபத்து ஏற்பட்டு 1 மணி நேரத்துக்கு மேலாகியும் இருவர் உடல்களை மீட்க காவல்துறையினர் வரவில்லை.இறந்தவர்கள் இருவரும் திருக்கோவிலூர் என்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் விபத்து நடந்த பகுதியில் குவிந்தனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து ஸ்தம்பித்துப்போனது. இதையடுத்து தென்பெண்ணையாற்றுத் தரைப்பாலத்தின் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

பின்னர் பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவர்கள் உடல்களை மீட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →