முகப்பு
தற்போதைய செய்திகள்

நீண்ட நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது: என்.எல்.சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

என்.எல்.சி. தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்த நீண்ட நாள் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. இன்று இரவு முதல் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:33 AM
பகிர்:

என்.எல்.சி தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்த நீண்ட நாள் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. இன்று இரவு முதல் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த மாதம் 20–ம் தேதி முதல் என்.எல்.சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல முறை நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சென்னையில் உள்ள நெய்வேலி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் உள்ளிட்ட என்.எல்.சி. நிர்வாக அதிகாரிகளும், நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மாலை 5 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. எனவே, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.

இதனிடையே, சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை குறித்து நெய்வேலியில் நேற்றிரவு பிற தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்களிடம் 2 தொழிற்சங்கத்தினரும் கலந்தாலோசித்தனர். அதில், முரண்பட்ட கருத்துக்களும் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, மீண்டும் இன்று காலை 11 மணியளவில் நெய்வேலியில் உள்ள ஐ.என்.டி.யு.சி. வளாகத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினருடன் தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க நிர்வாகிகள் மீண்டும் ஆலோசனை நடைபெற்றது.

சென்னை பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரு தரப்பினர் இடையே நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை, கடந்த 39 நாட்களாக நடந்த வேலை நிறுத்தப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. அதன்படி இன்று இரவு 10 மணி முதல் என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவார்கள் என் தொமுச பொதுச்செயலாளர் ராச வன்னியன் அறிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →