முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியர்களுக்கு இரு நாள் கணினி பயிற்சி 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கான இரு நாள் இலவச கணினி

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியர்களுக்கு இரு நாள் கணினி பயிற்சி 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கான இரு நாள் இலவச கணினி

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:49 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கான இரு நாள் இலவச கணினி பயிற்சி முகாம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் புதன், வியாழன் ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

பயிற்சியை பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைப் பிரிவு இயக்குநர் டாக்டர் எஸ்.என்.ரா்மசாமி முன்னிலையில், இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.கணினித் துறைத் தலைவர் பி.தீபலட்சுமி வரவேற்றார்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி கருத்துரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு பள்ளிகளில் முன்னேற்றத்திலும் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மிகுந்த அக்கறை கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இலவசமாக சிறப்பான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

ஆசிரியர்களும் மாணவர்களும் சர்வதேச தரத்தில் உள்ள இப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகூ வசதிகளை இலவசமாகப் பயன்படுத்தி தங்களது கல்வித் தரத்தினை உயர்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.கணினி அடிப்படைத் திறன்கள், எம்.எஸ். ஆபீஸ் மற்றும் இணையதள சேவை வசதி குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை முடித்த 100 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் டைபாக்கோர் திட்ட இயக்குநர் டாக்டர் ராமலட்சுமி நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →