முகப்பு
தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலை.யில் வளாக நேர்காணல்: 17 பேருக்கு பணி நியமன உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் 17 மாணவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:50 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் 17 மாணவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

சென்னை, தமிழ்நாடு கன்ஸ்ட்ரக்சன் பொறியாளர்கள் மற்றும் காண்டாக்டர்கள் அசோஸியேசன் தலைவர் என்.கோவிந்தசாமி, சென்னை லாயல் கவுசிங் பொது மேலாளர் நாயுடு, சக்தி டெக்னாலஜி இயக்குநர் சங்கீதா பாலாஜி ஆகியோர் பி.டெக். சிவில் இறுதியாண்டு மாணவர்களுக்கு எழுத்து மற்றும் நேர்காணலை நடத்தினர்.

இதில் 13 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.எம்.பி.ஏ. துறை இறுதியாண்டு மாணவர்களுக்கு, துபாய் கிரீன் பில்டிங் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி கே.எம்.பஜித் அகமது வளாக நேர்காணல் நடத்தினார். இதில் 4 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.6 லட்சம் ஊதியத்திற்கான பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு அதிகாரி அலாவுதீன், வேல்முருகன், செண்பகவல்லி ஆகியோர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →