முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரை நிர்வாணப் போராட்டம் !

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:52 AM
பகிர்:

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 4 செட் சீருடை, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவை, 15 மாத அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாளில் தொழிலாளர்களுக்கு அனைத்து பணப் பலன்களை வழங்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியினை நிர்வாகம் முறைகேடாக செலவு செய்து வருவதை கண்டித்தும், பொய் புகார் மூலம் தொழிலாளர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பேருந்துகளுக்கு தேவையான உதிரிபாகங்கள் பொருத்தி பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி திருநெல்வேலி போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியூ சார்பில் அரை நிர்வாணப் போராட்டம் நடைபெற்றது.

வண்ணார்பேட்டை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு அமைப்பின் தலைவர் எஸ். வின்சென்ட் தலைமை வகித்தார். மாவட்ட சிஐடியூ தலைவர் எம். ராஜாங்கம், தொடங்கி வைத்தார்.

கோரிக்கையை விளக்கி அமைப்பின் பொதுச்செயலர் எஸ். பெருமாள், துணைப் பொதுச்செயலர்கள் டி. காமராஜ், எஸ். ஜோதி, சி. மணி, சம்மேளனக்குழு உறுப்பினர்கள் கே. ஜோதி, டி. ஹரிகுமார், அமைப்பின் பொருளாளர் எம். சுப்பிரமணியன் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →