கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் தற்கொலை முயற்சி
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ குளிக்க முயன்றார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ குளிக்க முயன்றார்.
அவர் தன் கணவர் மற்றும் மாமியார் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்துவதால் நடவடிக்கை எடுக்க கோரி பண்ருட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்திலும், மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலும் மனு கொடுத்திருந்தார். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாமில் மனு கொடுக்க வந்த போது மண்ணென்னை ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அவரை மீட்டனர்.