முகப்பு
தற்போதைய செய்திகள்

வாங்கியக் கடனை திருப்பித் தராத உயிர் தோழன் : ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.2 லட்சம் வாங்கிக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:38 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.2 லட்சம் வாங்கிக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், தன்னாசி தெருவைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி ச.பிச்சைக்கனி (59). இவரும் மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அ.சேரன் செங்குட்டுவன் (59) என்பவரும் 30 ஆண்டுகள் நண்பர்கள்.

இந்நிலையில் சேரன் செங்குட்டுவன் புதிய வீடு கட்ட பிச்சைக்கனியிடம் ரூ.2 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் பணத்தைத் திரும்பத் தராமல் இழுத்தடித்து நம்பிக்கை மோசடி செய்தாராம்.

இது குறித்து ஜனவரி 7-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நேரில் ஆஜராகி பிச்சைக்கனி புகார் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி கவிதா, மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இதன் பேரில் போலீஸார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சேரன் செங்குட்டுவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →