முகப்பு
தற்போதைய செய்திகள்

இரு சக்கர வாகனம் திருடிச்சென்ற இருவரை விரட்டி பிடித்த பொதுமக்கள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

தற்போதைய செய்திகள்

இரு சக்கர வாகனம் திருடிச்சென்ற இருவரை விரட்டி பிடித்த பொதுமக்கள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:39 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தைச் திருடிச் சென்ற இருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் மதுரையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

குன்னூர், சின்னையாபுரம் காலனியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சண்முகசுந்தரம் (50). இவர் சோடா தயாரித்து இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று கடைகளுக்குப் போடும் தொழில் செய்து வருகிறார்.

தனது இரு சக்கர வாகனத்தை கிருஷ்ணன்கோவிலில், காவல் நிலையம் அருகே ஒரு கடை முன்பு நிறுத்திவிட்டு சோடா போட்டுக் கொண்டிருந்துள்ளார். பின்னர் திரும்பி வந்த போது இரு சக்கர வாகனத்தை இருவர் திருடிச் சென்று கொண்டிருந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் துரத்திச் சென்று அவர்களைப் பிடித்து வந்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சண்முகசுந்தரம், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதுரை, ஆரப்பாளையம், சோனைகோவில் தோப்பைச் சேர்ந்த அய்யாவுத்தேவர் மகன் ராஜேஷ் (29) மற்றும் இதே இடத்தைச் சேர்ந்த கணபதி மகன் குமார் (36) ஆகியோரைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →