முகப்பு
தற்போதைய செய்திகள்

போலியான நம்பர் பிளேட்: ஸ்ரீவில்லிபுத்தூரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை, காவல் துறை சார்பில்  வாகனப்பதிவு எண்களை பொறிப்பதில் போலியான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, துண்டு விநியோகம் செய்யப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:39 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை, காவல் துறை சார்பில்  வாகனப்பதிவு எண்களை பொறிப்பதில் போலியான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, துண்டு விநியோகம் செய்யப்பட்டது.

மத்திய அரசு அறிவித்துள்ள உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை ஐ.என்.டி. இதுவரை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனவே உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை என்ற குறியீடு கொண்ட போலி நம்பர் பிளேட்டுகளை வாகனங்களில் பொருத்துவது சட்டப்படி குற்றமாகும். அதே போல், நம்பர் பிளேட்டுகளை தயாரிப்பதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றம் என்பதை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டம் சார்பில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அதில் போலி நம்பர் பிளேட்டுகளின் மாதிரிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தத் துண்டுப் பிரசுரத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி சந்திப்பு பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. கே.முரளிதரன் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.  இது குறித்து டி.எஸ்.பி முரளிதரன் கூறுகையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கான ஐ.என்.டி என்று துவங்கும் உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட வில்லை.

எனவே இனிமேல் இது போன்ற உயர் பாதுகாப்பு குறியீட்டு பதிவு எண் பலகைகளை பயன்படுத்துவோர் மீதும், அதனை தயார் செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →