தற்போதைய செய்திகள்

நரிக்குடி அருகே ஆமணக்கு விதைகளை சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே ஆமணக்கு விதைகளை சாப்பிட்ட 5 சிறுவர்கள் வாந்தி ஏற்பட்டு மயக்கமடைந்ததை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிரமாக சிகிச்சை

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே ஆமணக்கு விதைகளை சாப்பிட்ட 5 சிறுவர்கள் வாந்தி ஏற்பட்டு மயக்கமடைந்ததை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நரிக்குடி அருகே பரளச்சி காவல் சரகத்தைச் சேர்ந்தது நல்லாங்குளம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் அங்குள்ள நல்லாங்குளம் மாரியம்மன் கோயில் முன்பு முத்துராமலிங்கத்தின் மகன் முத்துக்கிருஷ்ணன்(3), பூமிநாதன் மகன் அசோக்(7), ராமநாதன் மகன் முத்துக்காளை(4), முனியசாமியின் மகன் முத்துமணி(3) மற்றும் ராமநாதனின் மகள் தனலட்சுமி(3) ஆகியோர் சனிக்கிழமை மாலையில் விளையாடிக் கொண்டிருந்தார்களாம்.

அப்போது, அக்கோயில் முன்பு ஆமணக்கு விதைகள் சிதறி கிடந்துள்ளது. அதை முந்திரிகொட்டைகள் என நினைத்து எடுத்து சாப்பிட்டார்களாம். அதைத் தொடர்ந்து உடனே வாந்தி ஏற்பட்டு மயக்கமும் அடைந்தார்களாம். இதையடுத்து உடனே அருகில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT