முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் இளமையாக்கினார் கோயிலில் வரலாற்று உற்சவம்

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் என்கிற யெளவனாம்பாள் சமேத யெளவனேஸ்வரர் கோயில் திருத்தல வரலாற்று உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா புதன்கிழமை வெகு

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் என்கிற யெளவனாம்பாள் சமேத யெளவனேஸ்வரர் கோயில் திருத்தல வரலாற்று உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருத்தல வரலாற்று உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி வீதிஉலா மற்றும் திருவோடு கொடுத்தல் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை பகல் சுவாமி வீதிஉலா வந்த பின்னர் கோயில் தீர்த்தக் குளக்கரையில் சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கிய வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

சுரேஷ்குருக்கள், உ.வெங்கடேசதீட்சிதர் உள்ளிட்டோர் வரலாற்று நிகழ்வுகளை நடத்தினர். திருநீலகண்ட நாயனார் குருபூஜையை முன்னிட்டு கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவு யெளவனாம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் காரைக்குடி பெரி.மெ.பழனியப்ப செட்டியார் மற்றும் அவரது குடும்பத்தார்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.