கல்வி கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பச்சிபாறை அரசு வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றுபவர் ராஜகோபால். அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனது மகள் நர்சிங் பட்டிபிற்காக அந்த
கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பச்சிபாறை அரசு வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றுபவர் ராஜகோபால். அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனது மகள் நர்சிங் பட்டிபிற்காக அந்த வங்கியில் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்தார்.அப்போது வங்கி மேலாளர் கணேசனை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கணேசன் குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் ராஜகோபால் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.